உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்த துறைமுக ஊழியர்கள்

உலக ரத்ததான தினத்தையொட்டி சென்னை எண்ணூர் துறைமுக ஊழியர்களும் கடலோர காவல் படையினரும் ரத்ததானம் அளித்தனர்

Update: 2023-06-15 04:00 GMT

உலக ரத்தான நாளையொட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் ரத்ததான முகாம் சென்னைத் துறைமுக மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக ரத்ததான தினத்தையொட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில்   நடைபெற்ற ரத்ததான முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்.

உலக ரத்ததான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் ரத்ததான முகாம் சென்னைத் துறைமுக மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

ராயல் எலைட் அரிமா சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப் பட்ட இம்முகாமை சென்னை, எண்ணூர் காமராஜர் துறை முகங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்ததுடன் அவரும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார்.

இம்முகாம்களில் துறைமுக அலுவலர்கள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் எஸ். விஸ்வநாதன், அரிமா சாங்கத் தலைவர் பாஸ்கரன் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடலோரக் காவல் படை சார்பில்...

கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியம், அரிமா சங்கம், போர்டிஸ் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய மருத்துவ முகாமை காவல் படை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) டி.சுனில்குமார் தொடங்கி வைத்தார்.

இதில்  சுமார் 120 கடலோரக் காவல் படை வீரர்கள் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இருதயம், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் கண்டறியும் வகையில் முழு உடல் பரிசோதனையும் நடைபெற்றது.

Tags:    

Similar News