பெரம்பலூர்: வனப்பகுதியில் கிடந்த பெண் சடலம்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் வனப்பகுதியில் கிடந்த பெண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
அன்னமங்கலம் வனப்பகுதியில் பெண் உடல் மீட்கப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் மலையடிவார பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றிகாவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவல் துறையினர் உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெண் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது. அன்னமங்கலம் மலையடிவார பகுதியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.