குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-10-28 05:30 GMT

பைல் படம்.

பெரம்பலூர் அடுத்துள்ள பாளையம் கிராமத்தில், சுப்பிரமணியர் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில்முருகன். கூலி வேலை செய்துவரும் இவருக்கு செல்வம் (33) என்ற மனைவியும், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கூலி வேலை செய்துவரும் செந்தில் முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. செந்தில்முருகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் குடிக்க வேண்டாம் என்று மனைவி செல்வம் கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அக். 27ஆம் தேதி செந்தில்முருகன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவிக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த குடும்ப தகராறில் செல்வம் வீட்டின் அருகே சற்று தொலைவில் இருந்த கௌதம் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுத் தண்ணீரில் சடலமாக இருந்த செல்வதின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து பெரம்பலூர் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செல்வம் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News