பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி

தொடர் மழையால் பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2021-11-28 12:54 GMT

பெரம்பலூர் வடக்கு மாதிரி சாலையில்  தேங்கி நிற்கும் கழிவு நீரால்  தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நகரப்பகுதியில் முழுவதுமே பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு  சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு தொற்று நோய் பரவும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் பெரம்பலூர் நகர பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News