காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது.;
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் காது கேளாதோர் கௌதம புத்தர் அறக்கட்டளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பெரம்பலூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிப்புகள், உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துரணி துணை செயலாளர் வல்லபன், ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், நல்லதம்பி, ராமலிங்கம், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிபாஸ்கர், துரைகாமராஜ் திமுக இளைஞரணியினர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.