பெரம்பலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பெரம்பலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-03 09:00 GMT

வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையத்தில், உரிய நேரத்திற்கு வராத அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையத்தில்,  பெரம்பலூரில் இருந்து அரசு டவுன் பஸ் வந்து செல்கிறது. இந்த டவுன்பஸ் மேட்டுப்பாளையத்தில் அதிகாலை 5.30 மணிக்கே அளவில் வந்து செல்வதால் பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவர்களும் மேட்டுப்பாளையத்திலிருந்து வெளியூருக்கு செல்ல முடியவில்லை.

இதனால் பள்ளி, கல்லூரி நேரமான எட்டு மணிக்கு மேல் இந்த பஸ்சை இயக்கக்கோரி பலமுறை போக்குவரத்து கழகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் எந்த பலனும் இல்லாமல் அதிகாலை நேரத்திலேயே இந்த டவுன் பஸ் வந்து செல்வதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேட்டுப்பாளையம் டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூர் போலீசார்,  விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,  சமரச பேச்சுவார்த்தை நடத்தி அரசு டவுன் பஸ்சை விடுவித்தனர்.

Tags:    

Similar News