பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரபாகரன் எம்எல்ஏ திடீர் ஆய்வு!
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரபாகரன் எம்.எல்.ஏ திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர், அங்குள்ள அம்மா உணவகத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். அதன் பிறகு கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன்,நோயாளிகளுக்கு உரியநேரத்தில் உணவு வழங்குமாறு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் புதிய ஆக்ஸிஜன் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.அதைத்தொடர்ந்து அவர் பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களிடம் குறைகளை கேட்டறிந்தார், அப்போது இணை இயக்குனர் திருமால் மற்றும் கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.