பெரம்பலூர் சிறப்பு முகாம்களில் 10,210 பேர் தடுப்பூசியால் பலன்
பெரம்பலூர் மாவட்டத்தில், சிறப்பு முகாம்களில் 10,210 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 17 வது கட்டமாக 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி நடைபெற்றது.
இதில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2956 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1653 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2499 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3102 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 10,210 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.