Perambalur News Today-பெரம்பலூர் தி.க. சார்பில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்..!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தி.க.சார்பில் பெரியாரின் 50வது ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Perambalur News Today
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தி.க. சார்பில் பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (சனிக்கிழமை) மாலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகரத்தலைவர் ஆறுமுகம், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரங்கராஜன், நகர செயலாளர் ஆதிசிவம், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
Perambalur News Today
இந்த கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், தி.க தலைமை கழக பேச்சாளர் பூவை புலிகேசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் வீர செங்கோலன், தமிழ் வழிக்கல்வி இயக்க செயலாளர் கவிஞர் தேனரசன் ஆகியோரும்
Perambalur News Today
இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் குதரத்துல்லா, மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் காவேரி நாடன், தி.க மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன், அமைப்பாளர் குமரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியார் 24 டிசம்பர் 1973ல் இயற்கை எய்தினார்.சாதி, மூடநம்பிக்கை, அடக்குமுறைகளுக்கு எதிராக சிறுவயதிலேயே போராடி இயற்கை எய்தினார்.
1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த பெரியார், தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் சாதிக் கட்டுமானத்திலிருந்து விடுவித்து திராவிட இனத்துக்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்தார். சாதிக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்ட மக்களுக்கு அவர் சிறகுகளை வழங்கினார். பெண் விடுதலை, மறுமணம், ஜாதி ஒழிப்பு, சம உரிமை, சுயமரியாதை என்று வட மாநிலங்கள் இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளன.