Perambalur News-பெரம்பலூர் கிளை சிறைவாசிகளுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு..!

சிறைவாசிகளுக்கு சட்ட உதவிகள் வழங்குவதற்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் கிளை சிறையில் நடந்தது.

Update: 2023-12-28 12:19 GMT

perambalur news-பெரம்பலூர் கிளை சிறையில் நடந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Perambalur News

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைகுழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) தனசேகரன் ஆலோசனையின்படியும் பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Perambalur News

இந்த முகாமிற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் தலைமை தாங்கினார். அவர் சிறைவாசிகளிடையே பேசுகையில், "ஜாமீனில் எடுப்பதற்கும் வழக்கு நடத்துவதற்கும் தாங்கள் சட்ட உதவி மையத்தை நாடலாம். மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் மூலம் கிளைச் சிறைக்கு வரும் சட்டபணிகள் குழு வக்கீல்களிடம் தங்களுக்கு உரிய பிரச்னைகளை எடுத்துரைத்து ஆலோசனை பெற்று கொள்ளலாம். வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சட்ட உதவி மையத்தை நாடலாம்" என்றார்.

Perambalur News

மேலும், அவர் கூறுகையில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உரிய சட்ட வழிமுறைகளை எடுத்துரைத்தார். இதில் கிளைச் சிறையின் கண்காணிப்பாளர் சிவா, சட்டப்பணிகள் ஆணை குழுவின் வக்கீல்கள் திருநாவுக்கரசு, சங்கர் மற்றும் திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். முகாமில் 22 சிறைவாசிகள் கலந்து கொண்டனர்.

சிறைவாசிகளிடம் இருந்து சட்ட உதவிக் கோரிய மனுக்கள் பெறப்பட்டன. 

Tags:    

Similar News