பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

Update: 2021-06-07 12:00 GMT

பெரம்பலூரில் தவறவிட்ட மணிபர்சை, கால்நடை மருத்துவர் செந்தில்குமாரிடம் போலீசார்  ஒப்படைத்தனர். 

பெரம்பலூர் நகரப்பகுதியில் நகராட்சி பணியாளர்கள் காலை பணிக்கு சென்றனர்.அப்போது  பழைய பேருந்து நிலைய பகுதியில்  நகராட்சி பணியாளர் குமார்,லோகு என்பவர் நடந்து சென்றனர். 

சாலையோரத்தில் கீழே கிடந்த மணி பர்சை பார்த்தனர். அதனை எடுத்தனர்.    இதை சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்க வேண்டுமென்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டனர். சாலையில் கிடைத்த மணிபர்சை  அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவிடம் ஒப்படைத்தனர். போலீசார் பர்சை சோதனை செய்தனர். அந்த மணி பர்ஸ், அம்மாபாளையம் அரசு கால்நடை மருத்துவர் செந்தில்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.மருத்துவர் செந்தில்குமாரை அழைத்து ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் நகராட்சி பணியாளரின் நேர்மையை போலீசார் மற்றும் கால்நடைமருத்துவர் பாராட்டினர்.

Tags:    

Similar News