பெரம்பலூரில் ஊரடங்கு விதி மீறி திறந்த 2 கடைகளுக்கு சீல்

பெரம்பலூர் நகராட்சியில் 144 தடை உத்தரவை மீறி திறந் திருந்த 2 கடைகள் நகராட் சி ஆணையர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-05-31 06:15 GMT

பெரம்பலூரில்  ஊரடங்கு விதிகளை மீறி திறந்த இரண்டு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

144 ஊரடங்கு தடை உத்தர வைமீறி பெரம்பலூர் நகரா ட்சியில் கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனுக்குத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பழை ய பஸ்டாண்டு பகுதியில் பள்ளி வாசல் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது திறந்திருந் த பல கடைகளின் ஷட்டர் களை இழுத்து மூடிவிட்டு கடை உரிமையாளர்கள் ஓட்டமெடுத்தனர்.

அப்போது அரிசிக் கடை, மளிகைக் கடைஉள்ளிட்டக் கடை ஆகிய 2 கடைகள் நக ராட்சி ஆணையர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப் பட்டது. அப்போது நகராட்சி வருவாய் ஆய்வாளர் திருச்சந்திரன், வருவாய் உதவியாளர்கள் கண்ணன், மகேஷ்வரன், துப்புரவு மேற் பார்வையாளர்கள் விநாயகம், ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News