இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் ஒப்படைப்பு
இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.;
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மணி தலைமையில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் அவரது குழுவினர்கள், காணாமல் போன செல்போன்கள் மற்றும் இணையதள மோசடிகளால் இழந்த பணத்தை மீட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18.12.2021 முதல் 35 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்களில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 25 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், இணைய வழி மூலம் பொருட்கள் விற்பதாகவும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடி மூலமும் பணத்தை இழக்கிறார்கள். அவ்வாறு பணத்தை இழந்த நான்கு நபர்களுக்கு இழந்த தொகை ரூ.1,08,000-த்தை மீட்டு இன்று உரிய நபர்களிடம் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி இணையவழிக் குற்றங்களில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.