பெரம்பலூர் அருகே கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் பலி,போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-06-27 14:02 GMT

பெரம்பலூர் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் இறந்தார்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் பிரகாஷ் வயது 19 இவர் பெரம்பலூர் அருகேயுள்ள கவுல் பாளையம் கிராமத்தில் இருக்கும் தனது பெரியப்பா நடராஜன் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்,

இந்நிலையில் இங்கு இருக்கும் இளைஞர்களுடன் இன்று மதியம் கவுல் பாளையம் கிராமத்திலிருந்து நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே உள்ள கல்குவாரியில் உள்ள ஆழமான குளத்தில் நண்பர்களுடன் சென்று குளித்துள்ளார்.

பிரகாஷ் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார் வெகு நேரமாக வெளியே வராததால், உடனிருந்த நண்பர்கள் ஊர் மக்களிடம் தெரிவித்தனர்.

கிராம மக்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் பிரகாஷ்சை இறந்த நிலையில் சடலமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷின் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரகாஷ் எப்படி நீரில் மூழ்கி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டுக்கு வந்த இளைஞன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கவுள்பாளையம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News