கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-01-24 17:00 GMT

பைல் படம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, குடியரசு தினமான 26.01.2022 அன்று, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாது என்ற தகவல் கிராம ஊராட்சிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்)-க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News