பெரம்பலூர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட வி.சி.க. வினர் விருப்ப மனு

பெரம்பலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வி.சி.க. வினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.;

Update: 2021-12-06 15:41 GMT

பெரம்பலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் 50 க்கும் மேற்பட்டோர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வீர வணக்க கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகர்ப்புற தேர்தலுக்காக துறைமங்கலம் எட்டாவது வார்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட தென்றல் சரண்ராஜ், தனது விருப்ப மனுவை பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கத்திடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாநில செயலாளர் வீர.செங்கோலன் , மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின்,மு.உதயகுமார்,ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.மனோகரன், மூ.கதிரவன்,வேப்பூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வராணி வரதராஜன்,மாநில துணைச் செயலாளர்கள் பிரேம்குமார்,வழக்கறிஞர் அண்ணாதுரை,தமிழ்குமரன் ,நகர அமைப்பாளர் தென்றல் சரண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News