பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா ரிக்ஷாவில் வந்து மனு தாக்கல்
பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா ரிக்ஷாவில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 3வது வார்டில் லதா என்பவர் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் நேற்று ரோவர் ஆர்ச் தேர்தல் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் நகராட்சி அலுவலகத்திற்கு ரிக்ஷாவில் ஊர்வலமாக வந்து கட்சி ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்,
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்பொழுதும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புகிறேன் அவர்கள் கஷ்டத்தில் நான் எப்போதும் துணை இருப்பேன் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள் .எனவே நான் வெற்றி பெற்றால் எனது வார்டில் இருக்கும் அனைத்து அடிப்படை வசதியும் செய்து தருவேன் என்பதை விளக்கவே நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றார்.