உதகை: விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர்

உதகை நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர்;

Update: 2022-02-04 08:39 GMT

விஜய் மக்கள் மன்றம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் சந்தோஷ்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் உதகை நகராட்சியில் காலை முதலே ஏராளமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் மன்றம் போட்டியிடும் என கூறியிருந்த நிலையில் உதகை நகராட்சியில் 36 வார்டுகளில் 4 வார்டுகளில் விஜய் மக்கள் மன்றம் போட்டியிடுகிறது.

இன்று இந்த நான்கு வேட்பாளர்களும் உதகை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் இருபத்தி மூன்று வயது உடைய சந்தோஷ் என்ற இளைஞர் வேட்பு மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விஜய் மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளபடி அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பேன் என இளம் வேட்பாளர் சந்தோஷ தெரிவித்தார்.

Tags:    

Similar News