உலக அதிச்சி தினம்: உதகைையில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

உலக அதிர்ச்சி (World Trauma Day) தினத்தையொட்டி இன்று உதகைையில் வாகன ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-10-17 07:31 GMT

வாகன ஓட்டுநர்கள் மத்தியில் முதலுதவி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத்துறையினர்.

உலக அதிர்ச்சி (World Trauma Day) தினத்தையொட்டி இன்று உதகைையில் வாகன ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உதகை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால மருத்துவ பிரிவின் சார்பில் மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் மனோகரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்து காலங்களில் உடனடி முதலுதவி சிகிச்சை அளிப்பது, 108 அவசர கால ஆம்புலன்ஸ் தொடர்பு கொள்வது என உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக அரசு தலைமை மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு தலைவர் திரு அமர்நாத் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் டாக்டர் வினோத், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  முத்துமாணிக்கம் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News