உலக யானைகள் தினம்; விழிப்புணர்வு பேரணி சென்ற ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்

Nilgiri News, Nilgiri News Today-உலக யானைகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

Update: 2023-08-11 10:54 GMT

Nilgiri News, Nilgiri News Today- உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் அரசு கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர். 

Nilgiri News, Nilgiri News Today- உலகளவில் யானைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி (நாளை) உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். முதல்வர் அருள் ஆண்டனி தலைமை வகித்தார்.

இதில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசியதாவது, இந்தியாவில் யானைகள் கடுமையான வாழ்விட இழப்பு, தனியார் காவலில் கொடுமை மற்றும் தந்தங்களுக்காக வேட்டையாடுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. யானைகள், மக்களுடனான மோதலை குறைக்க அதன் வாழ்விடத்தை பாதுகாப்பது முக்கியம். தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தந்தத்திற்காக வேட்டையாடுவதை நிறுத்த சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது மற்றும் அதற்காக பிற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக இந்தியாவில் யானைகள் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை. 

தமிழகத்தில் இறந்த 1,544 யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ததில், 75 காரணங்களுக்காக யானைகள் இறப்பது தெரியவந்தது. இதில் குடல் புழுக்கள் தாக்குதல், மின்சாரம் தாக்குதல், வேட்டைக்காக யானைகள் கொல்லப்படுதல் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்குள் சண்டையிடுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். எனவே, மேற்கண்ட காரணங்களால் யானைகள் இறப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வேலி அமைக்க தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் பேராசிரியர் முருக பாரதி நன்றி கூறினார்.

இதற்கிடையே உலக யானைகள் தினத்தையொட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாணவ-மாணவிகள் யானை முக உருவம் கொண்ட முக மூடியை அணிந்து பங்கேற்று கல்லூரியில் இருந்து சேரிங்கிராஸ் பகுதி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News