உதகையில் மகளிர் தின விழா போட்டி: ஆர்வமுடன் மகளிர் பங்கேற்பு
மகளிர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த உறுப்பினர்களை தேர்வு செய்து பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.;
ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், உலக மகளிர் தின விழா உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரங்கோலி, பேச்சு, பாட்டு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
கக்குச்சி, கூக்கல், தொட்டபெட்டா, கடநாடு, நஞ்சநாடு என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து மகளிர்கள் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த உறுப்பினர்களை தேர்வு செய்து பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.