நிலப்பிரச்னை காரணமாக தொழிலாளியை கொல்ல முயற்சித்தவர்களுக்கு சிறை

உதகையில் நிலப்பிரச்னை காரணமாக தொழிலாளியை கொல்ல முயற்சித்த பெண் மற்றும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2021-09-09 09:32 GMT

இட பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கொல்ல முயற்சித்த தாய், 2 மகன்கள் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவி விசாலாட்சி . இவர்களுக்கு ரஞ்சித் (30), உதயகுமார் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும், வீட்டு அருகே கூலி தொழிலாளியான வினோத் (27) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததது.

கடந்த 6.11.2018-ந் தேதி அன்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த விசாலாட்சி, அவரது மகன்கள் ரஞ்சித், உதயகுமார் ஆகியோர் வினோத்தை கத்தியால் வெட்டி தாக்கினர். இதில் அவரது முகத்தில்  படுகாயம் ஏற்பட்டது.  இதுகுறித்த புகாரின் பேரில் உதகை நகர மத்திய போலீசார் தாய் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை உதகை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று . இந்த நிலையில்  இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. உதகைசார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன் விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கொலை செய்ய முயற்சித்த தாய் விசாலாட்சி, அவரது மகன்கள் உதயகுமார், ரஞ்சித் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ரஞ்சித்துக்கு ரூ.2,500, விசாலாட்சி மற்றும் உதயகுமாருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் 3 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

Tags:    

Similar News