உதகை கல்லட்டி சாலையில் வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் இரவில் வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானையால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள்.
உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலை பாதையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும் இச்சாலையில் யானை, புலி, சிறுத்தை , கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில் நேற்று இரவு கல்லட்டி மலைப்பாதையில் உள்ள 19ஆம் கொண்டை ஊசி வளைவில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து நின்றது சாலை ஓரத்தில் இருந்த மரக் கிளைகளை உடைத்து உண்ட பின்பு நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றது.
நீண்ட நேரம் அச்சத்துடன் காத்திருந்த வாகன ஓட்டிகள் யானை வனப் பகுதிக்குள் சென்றவுடன் நிம்மதி அடைந்து வாகனங்களை எடுத்துச் சென்றனர்.