கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட நீலகிரி கலெக்டர் அம்ரித்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமூலம் 9 பயனாளிகளுக்கு ரூபாய் 1,71,665 மதிப்பில் மானியத்துடன் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்

Update: 2022-03-22 14:15 GMT

நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கலெக்டர் அம்ரித்.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் அம்ரித் வெளியிட்டார்.

பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு ரூபாய் 4,712.12 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை பெற வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

அரசு மானியம் பெறும் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வங்கிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும். தொழில் உதவி கடன்கள், கல்விக்கடன், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூபாய் 1,71,665 மதிப்பில் மானியத்துடன் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News