உதகை: பாஜக தொழில் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள்
பிரதமரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தொழில் பிரிவு சார்பில் செவிலியர்கள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் நேற்று பாரத பிரதமரின் 71 வது பிறந்த தினத்தை கொண்டாடினர். இதனையொட்டி பாஜக தொழில் பிரிவு சார்பில் உதகை அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு கம்பளிகள், முதியோர்களுக்கு உணவு, காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.
மாநில தொழில் பிரிவு தலைவர் பாஸ்கரன்,மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்நிகழ்ச்சியில் தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் சபரிஷ், துணை தலைவர் பிரேமயோகன், தொழில் பிரிவு உதகை நகர செயலாளர் செளந்தர் பிரஷாத் மற்றும் உதகை நகர துணை தலைவர் கணேசன், உதகை நகர செயலாளர் ப்ரவீன் சஞ்சய் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.