நீலகிரியில் அனுபோக சான்று பெற இணையதள வசதி

விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.;

Update: 2021-09-30 15:54 GMT

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் விவசாய மற்றும் விவசாய வங்கி கடன் தேவைகளுக்காக நில அனுபோக சான்றிதழ் தாசில்தார்கள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகளின் நலன் கருதியும், அனுபோக சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்தவும் பொதுமக்கள் அனைத்து இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது தங்களது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் https://serviceonline.gov.in/tamilnadu/directapply.do?serviceId=745 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து அனுபோக சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது. எனவே, விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News