உதகை உழவர் சந்தை நுழைவாயிலில் நீச்சல்குளம்
உதகை உழவர் சந்தை நுழைவாயில் பகுதியில் குளம் போல் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை;
உதகை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் உழவர் சந்தை அருகே உள்ள குழாய் உடைபட்டு வெளியேறிய தண்ணீருடன் மழைநீரும் தேங்கி, நுழைவுவாயில் பகுதியில் குளம் போல் காட்சியளிக்கிறது.
எனவே குளம் போல் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையூறின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.