கோடை சீசன் தொடங்கியாச்சு..! உதகையில் வாட்டர் ATMகளை சீரமைக்கும் பணி தீவிரம்

உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரங்களை பழுதுபார்த்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2022-03-20 08:00 GMT

பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

குடிநீர் பாட்டில்கள் விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்கள், நெடுஞ்சாலைகள், முக்கிய பகுதிகள் 70 இடங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அப்போது இயந்திரங்கள் பராமரிக்கப்படாததால் செயல்படாமல் கிடக்கின்றன. சில பாகங்கள் திருட்டுப்போய்விட்டன. 

சுற்றுலா பயணிகள் இயந்திரங்களில் குடிநீர் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள தண்ணீர் இயந்திரங்களை, ஒரு வாரத்துக்குள்  சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோடை சீசனை ஒட்டி பழுதடைந்த குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பு உள்ள இயந்திரத்தை இன்ஜினியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி, குடிநீர் வழங்கும் கருவி சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்த்து சீரமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து இயந்திரங்களையும் பழுதுபார்த்து மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News