உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன

ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் என 15 வாக்கு எண்ணும் மையங்களில்300போலீசார் பாதுகாப்புபணியில்ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2022-02-20 13:39 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை சீல் வைத்து பூட்டப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் 291 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,253 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடிகளில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவில் குளிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு அறைகளில் தரையில் இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்தும் சரியாக கொண்டு வரப்பட்டு உள்ளதா என பார்வையிட்டனர். அதன்பின்னர் ஊட்டி நகராட்சியில் ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 2 பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

ஆயுதப்படை போலீசார், போலீஸ் நிலைய போலீசார், ஊர்க்காவல் படையினர் என 15 வாக்கு எண்ணும் மையங்களில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News