நீலகிரியில் வரும் 21ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.;

Update: 2021-11-18 08:30 GMT

கோப்பு படம்

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் சிறப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. இம்முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, உரிய  ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளை அணுகி, வாக்காளர் பட்டியலை பார்வையிட்டும், திருத்தங்கள் இருப்பின் அதனை சரி செய்வதற்கு உரிய படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்று பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News