உதகை உண்டு உறவிடப் பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு

உதகை உண்டு உறவிடப் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-02 09:29 GMT
உதகை உண்டு உறவிடப் பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு

பைல் படம்.

  • whatsapp icon

உதகை அருகே முத்தோரை பாலாடா கிராமத்தில் ஏகலைவா அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி கோக்கால் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பிளஸ்-2 மாணவியின் கழுத்தில் அணிந்த துப்பட்டாவை கையால் இழுத்து கழற்றினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, உதகை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (58) மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News