நீலகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று, 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.;
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விசர்ஜன ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளின் படி பொதுமக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபட்டனர்.
இதையடுத்து, இந்து முன்னணி சார்பில் வீடுகள் மற்றும் தனியார் கோவில் வளாகங்களுக்குள் 290 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நீலகிரியில் 5 இடங்களில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி, உதகை அருகே காமராஜ் சாகர் அணையில் சிலைகளை கரைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் துடுப்பு படகில் சிலைகளை உள் பகுதிக்கு எடுத்துச் சென்று தண்ணீரில் கரைத்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. இதேபோல், கூடலூர் பகுதியில் ஆறுகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.