உதகையில் படைவீரர் கொடிநாள் விழா

மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் 156 பேர் பதிவு செய்தனர்.

Update: 2021-12-07 10:30 GMT

உதகை கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் விழா.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், உதகை கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் தலைமை தாங்கி 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, திருமண மானியம் வழங்க 161 விண்ணப்பங்கள் மைய முப்படைவீரர் வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் 156 பேர் பதிவு செய்தனர்.

முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கொடிநாள் நிதி வசூல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் திரட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.86 லட்சத்து 89 ஆயிரம், 2019-ம் ஆண்டு ரூ.56 லட்சத்து 31 ஆயிரத்து 503, 2020-ம் ஆண்டு ரூ.85 லட்சத்து 73 ஆயிரத்து 278 கொடிநாள் நிதி திரட்டப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News