உக்ரைன் உலகக்கோப்பை மினி கால்பந்து போட்டி: நீலகிரி மாணவியர் 4 பேர் தேர்வு
உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள உலக கோப்பை மினி கால்பந்து போட்டியில் பங்கேற்க, நீலகிரி மாவட்ட பள்ளியை சேர்ந்த நான்கு மாணவியர் தேர்வாகியுள்ளனர்.;
பெண்களுக்கான, 23 வயதுக்குட்பட்ட மினி கால்பந்து- 2021 உலக கோப்பை கால்பந்து போட்டிகள், உக்ரைன் நாட்டில் ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி துவங்குகிறது. இதில், பல்வேறு நாடுகளும் பங்கேற்கும் சூழலில், இந்தியாவில் இருந்து ஆசிய மினி கால்பந்து கூட்டமைப்பு தேர்வு செய்த, 15 பேர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த குழுவில், நீலகிரியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவியர் சவுமியா, ஜெயஸ்ரீ, ஹப்சிபா கிரேஸ், சஞ்ஜனா ஆகிய நான்கு மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் நீலகிரிக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். உக்ரைன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவியர், உதகை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.