உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு: ரூ.1.38 லட்சம் பணம் பறிமுதல்

இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-10-29 13:39 GMT

உதகையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் பெறவும், முழு வாகன பரிசோதனைக்கும் லஞ்சம் கேட்டதாக புகார்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் 2 மணி நேரம் மேல் சோதனை நடந்தது.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 38 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News