உதகை: புகையில்லா போகி பிரச்சார வாகனம் துவக்கம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் 2 நாள் சுற்றுப்பயணமாக விழிப்புணர்வு வாகனத்தை நீலகிரி கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2022-01-11 14:00 GMT

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பழைய சிந்தனைகளையும் செயல்களையும் தவிர்த்து புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கிலும் "பழையன கழிதலும் புதியன புகுதலுமென" நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட போகிப்பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

இத்தகைய பழக்கம் பெரும் நகர்ப்புறங்களில் அது மட்டுமன்றி சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் கடைபிடிக்கப்பட்டு போகியன்று தங்களிடம் உள்ள பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள் ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் டியூப் ரசாயனம் கலந்த பொருட்களை இருப்பதாக மாறி இதனால் புகை மாசு ஏற்படுகிறது.

மேலும் காற்று மாசுபடுத்தும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது எனவும் செயற்கையான பொருட்களை எரிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News