உதகை இத்தாலியன் பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்று நடும் பணி தீவிரம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக இத்தாலியன் பூங்காவில் 2 லட்சம் மலர்கள் நடவும் பணி தீவிரம்;

Update: 2021-08-18 07:52 GMT

உதகை அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள இத்தாலியன் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான 2 லட்சம் மலர் நாற்று நடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுகளாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டதால் கோடை விழாக்கள் நடைபெறவில்லை.

தற்போது கொரனோ தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள  தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கும்  பூங்காக்கள் அனைத்தும் இரண்டாம் கட்ட சீசனுக்காக தயாராகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் தொட்டிகளில் 150 ரகங்களில் 2 லட்சம் மலர்கள் நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சீசனுக்குள் பூக்கள் மலரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்காததால், வெறிச்சோடி காணப்பட்ட பூங்கா, இந்த முறை இரண்டாம் கட்ட சீசனுக்கு திறக்கப்படுமா என சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News