உதகையில் லாரிகள் வேலை நிறுத்தம்: கேரட் தொழில் கடும் பாதிப்பு
உதகையில் லாரி ஓட்டுநரை தாக்கிய கேரட் அறுவடைக்கு செல்லும் லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உதகையில் கேரட் அறுவடை பணிக்குச் செல்லக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இந்நிலையில் லாரி ஓட்டுனர் ஒருவர் தனது லாரியை தூய்மைப்படுத்த தண்ணீர் தெளிக்கும்போது பெண் கூலித்தொழிலாளி ஒருவர் மீது தண்ணீர் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த பெண் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவருடன் இருந்த மற்ற மூவரும் லாரி ஓட்டுநரை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து லாரி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கேரட் அறுவடைக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.