அதிமுக அவைத் தலைவர் மறைவிற்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் இறப்பிற்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-08-06 07:41 GMT

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மறைந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு அதிமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கட்சியின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு மறைந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியின் போது அதிமுகவின் கட்சியில் அவைத்தலைவர் மதுசூதனன் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தலைமை உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிமுக கொடி கம்பங்களில் 3 நாள் அரை கம்பத்தில் கொடி இருந்து துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

Tags:    

Similar News