உதகை நகரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை நகரில் பிரதான சாலையில் மரம் விழுந்து இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2021-07-22 16:12 GMT

உதகையில் மரம் விழுந்ததால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உதகையில் பெய்து வரும் கனமழையால் 50 அடி உயர மரம் சாலையில் விழுந்தது இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு மரத்தை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறபடுத்தினர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உதகையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இதனால் பல கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மரங்கள் விழுந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து மிக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையால் உதகை வால்சம் சாலையில் 50 அடி மரம் சாலையில் விழுந்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாள்தோறும் இச்சாலையில் அதிகமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது நகர மையப்பகுதியில் மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News