உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ-பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி, கலெக்டரிடம் மனு

உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ - பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-06-21 10:02 GMT

உதகையில் சுற்றுலா வாகன ஓட்டிகள், திருமணம், இறப்புக்கு சவ்வாரி செல்ல அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று வர விண்ணப்பிக்க முடியாததால் இபாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி உதகை வாடகை கார் ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இ

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தினர் நீலகிரி மாவட்டத்திற்கு வர இபாஸ் நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது.

ஆனால் அதற்கான இணைய தளத்தில் மருத்துவ சிகிச்சைக்கு  மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யபட்டுள்ளது. 

திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக்கு சென்று வர விண்ணப்பிக்க வசதி இல்லை. இதனால் டேக்சிக்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இபாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரியும் ஊரடங்கால் பாதிக்கபட்டுள்ள தங்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரியும் உதகை வாடகை கார் ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிடம் மனு அளித்து கோரிக்கைவைத்தனர். 

Tags:    

Similar News