உதகை சுற்றுலா தலங்களில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் சுற்றுலா பயணிகள் வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உள்ளூர் மக்கள் அச்சம்

Update: 2022-01-02 12:16 GMT

உதகையில் முகக்கவசம் இல்லாமல் வரும் சுற்றுலா பயணிகள் 

கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளிகள் தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு 10 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 25 ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், நோய் தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்காமல் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கின்றன.

குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஒமிக்ரான் வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி சுற்றுலாத்தலங்களில் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் சுற்றுலா தளங்களில் கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்கின்றன. சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கேரள மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவதால் அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தவறினால் சுற்றுலாப் பயணிகளால் தங்களுக்கும் நோய் தொற்று பரவும் என சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே சுற்றுலாத்தலங்களில் நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகமானது தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News