உதகையில் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

நகரில் பல பகுதிகளிலுள்ள சாலை வாகன நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதி.

Update: 2021-12-28 10:57 GMT

உதகை நகரில் கடுமையான வாகன நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உதகை நகரில் கடுமையான வாகன நெரிசல் திக்கித் திணறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சீரான போக்குவரத்து ஏற்படுத்திக் கொடுக்குமா காவல்துறை பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளிகள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக உதகை நகரில் பல பகுதிகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அனுமதித்து வரும் நிலையில் அதை சீராக செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக உதகை மையப்பகுதியில் உள்ள சேரிங் கிராஸ் சமவெளிப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளும், உதகையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய அதிகமான பேருந்துகளும் சேரிங் கிராஸ் சாலையிலிருந்து பிரிந்து செல்கின்றன.

மேலும் அதிக அளவிலான உள்ளூர் மக்களும் பயன்படுத்தக்கூடிய சாலையாகவும் இருந்து வருகிறது. இத்தகைய கடுமையான வாகன நெரிசல் காரணமாக போலீசார் தடுப்புகளை அமைத்து மாற்று வழியில் வாகனங்களை அனுமதிப்பதால் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. குன்னூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மாற்று வழியாக லவ்டேல் ஜங்ஷனிலிருந்து பாதை இருக்கும் நிலையில் அந்த சாலையில் வாகனங்களை அனுமதிக்காததே நகரில் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் உதகை நகரில் கேசினோ ஜங்ஷனிலிருந்து எட்டின்ஸ் சாலையில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதால் குன்னூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. எனவே காவல்துறை சாலையில் வாகனங்கள் சீராக செல்லும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மாற்று பாதைகளை அமைத்து ஒவ்வொரு பகுதியிலும் பெயர் பலகையை வைத்தால் மாற்றுப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News