ஆங்கில புத்தாண்டை கொண்டாட உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குளுகுளுகாலநிலையை அனுபவிக்க வந்துள்ளதாகவும் படகு இல்லத்தில் படகுசவாரி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா நகரமான நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , படகு இல்லம், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உதகை படகு இல்லத்தில் இயந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு, உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர். இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கையில், ஆங்கில புத்தாண்டை கொண்டாட இன்று உதகைக்கு வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.