உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாள் என்பதால் உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.;

Update: 2022-02-20 10:31 GMT

உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

விடுமுறை நாள் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். உதகை, குன்னூர், கோத்தகிரி , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குறிப்பாக உதகையில் அரசு தாவரவியல் பூங்கா பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் காலநிலையை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக ஊட்டிக்கு குடும்பத்துடன் வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்க்கும்போது இங்குள்ள காலநிலை மிக ரம்மியமாக உள்ளதாக தெரிவித்தனர்.

அதே போல் ஒவ்வொருவரும் இங்கு உள்ள சுற்றுலா தலங்களை காண குடும்பத்துடன் குவிந்து வருவது காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News