சாரல் மழை சீசனை அனுபவிப்பதற்காக ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சாரல் மழை சீசனை அனுபவிப்பதற்காக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;

Update: 2023-07-10 17:13 GMT

ஊட்டியில் சாரல் மழையில் குடை பிடித்த படி நடந்த சுற்றுலா பயணிகள்.

வார விடுமுறை நாட்களை யொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அகில இந்திய அளவிலான சுற்றுலா தலமாகும்.  இந்த ஆண்டு தற்போது கோடை சீசன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வந்தபடி உள்ளனர். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலை முதல் மிதமான சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், குடைகளை பிடித்தபடியும், மழையில் நனைந்தவாறும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புல்தரையில் அமர்ந்தும், ஆடிபாடியும், விளையாடியும் குடு ம்பத்துடன் விடுமுறையை கொண்டாடினர்.

Tags:    

Similar News