உதகையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் : நோய் தொற்று பரவும் அபாயம்

உதகை மைசூர் சாலையிலுள்ள பைன் பாரஸ்ட்டில் வேலியை தாண்டி செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை

Update: 2021-08-08 08:38 GMT

உதகையில் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் மேலும் அத்துமீறி சுற்றுலாத்தலங்களுக்குள் சென்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அளிக்கப்பட்ட இருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் இ - பாஸ் கட்டாயமாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தாலும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து திரும்பி செல்லும் நிலையில் உதகை அருகே ஃபைன் பாரஸ்ட் எனப்படும் சுற்றுலா தளத்தில் அத்துமீறி வேலிகளில் நுழைந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளே சென்றனர்.

மாவட்ட நிர்வாகமானது பல பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ள நிலையில் பைன் பாரஸ்ட் பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலாப் பயணிகள் முக கவசம் அணியாமல் செல்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்புள்ளது எனவே பேரூராட்சி அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News