சுற்றுலா தலங்கள் திறக்கப்படுமா? வாழ்வாதாரமின்றி வாடும் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கில் தளர்வு உள்ள நிலையில், நீலகிரியில் சுற்றுலா தலங்களை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-22 02:44 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன இதனால் சுற்றுலா தலங்களை நம்பியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உதகை படகு இல்லத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குதிரைகள், சுற்றுலா பயணிகளுக்கு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனோ ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. உதகை படகு ஏரியில் நாள்தோறும் சுழற்சி முறையில் குதிரை உரிமையாளர்கள் இருந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி காணப்படுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

படகு இல்லத்தில் இருந்து சுற்றுலா பயணிகள், குதிரை சவாரி ஏறி சுமார் ஒரு கிலோமீட்டர் சென்று, படகு இல்லத்தை சுற்றிப்பார்த்து வருவர். ஆனால் தற்போது படகு இல்லம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால், குதிரை உரிமையாளர்கள் உதகை படகு இல்லத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைந்து படகு இல்லம் திறக்கப்பட்டால் மட்டுமே தங்களின் பொருளாதார நெருக்கடி சீராக இருக்கும் என தெரிவிக்கும் குதிரை உரிமையாளர்கள், தமிழக அரசானது இதை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News