உதகையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
நீலகிரிக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டது. இதனால் உதகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உதகையில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி ஆயிரம் கிலோ ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் விலை குறைவாக விற்கப்பட்ட தக்காளியை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.