உதகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் நீலகிரி கலெக்டர் ஆய்வு

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது. ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்;

Update: 2022-01-22 10:45 GMT

உதகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் தேர்வாணைய உறுப்பினர் கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்,  சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிக்கான எழுத்துத் தேர்வு உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத்தேர்வை,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் முனைவர் கிருஷ்ணகுமார், கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வுக்கு,  நீலகிரியில் 18 பேர் விண்ணப்பித்தனர். தேர்வை 11 பேர் எழுதினர். 7 பேர் வரவில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News